சிரியாவில் ஒரு மசூதி மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் இந்த மசூதி அமைந்திருக்கிறது. இதன் மீது குண்டுகள் வீசப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தாக்குதலில் 40-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் 300-க்கும் அதிகமானோர் மசூதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம், மசூதியைக் குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறியுள்ளது. அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய ரகசியக் கூட்டத்தின்மீதே குண்டுகள் வீசப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் விளக்கமளித்துள்ளது.
மசூதியைச் சுற்றி ஏராளமான சடலங்கள் சிதறிக் கிடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதால், அமெரிக்க ராணுவத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.