அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களில் ஒன்று கொலராடோ. அந்த மாநிலத்தின் ஆளுநராக உள்ளார் ஜாரெட் பொலிஸ். அண்மையில் அவருக்கும் அவரது துணைவியாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் தன்னை தன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் ஆளுநர்.
இந்நிலையில் அவர் கையெழுத்து இட வேண்டிய கோப்புகளை தபாலில் அனுப்பியுள்ளது மாவட்ட நிர்வாகம். அதில் அவர் தோற்று பாதிப்பு கண்டறிவதற்கு முன்னர் கொரோனவை கட்டுப்படுத்த வேண்டிய சட்ட நடைமுறைகளுக்கான கோப்புகளும் இருந்தன. அதில் அவர் கையெழுத்து இட்ட கையுடன் கிருமி நாசினியும் தெளித்துள்ளார். அதை வீடியோவாகவும் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தொற்றுநோயை திறம்பட எதிர்ப்பதற்கான மாநில மசோதாவில் இன்று கையெழுத்திட்டேன்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.