பின்லேடன் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

பின்லேடன் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்
பின்லேடன் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்
Published on

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவின் தலைவர் ஓசாமா பின்லேடன். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ள பின்லேடனை அமெரிக்கக் கடற்படை சுட்டுக்கொன்றது. 2011 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் அவர் கொல்லப் பட்டார். அவருக்குப் பிறகு அந்த பயங்கரவாத அமைப்பை, அவர் மகன் ஹம்சா பின்லேடன் வழி நடத்துவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித் துள்ளது. 

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயரதிகாரிகள் மூன்று பேர் இத்தகவலை தெரிவித்ததாக என்.பி.சி தெரிவித்துள்ளது. அவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்ற விவரமும் இதில் அமெரிக் காவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.  அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இது உண்மைதானா என்று கேட்டதற்கு, ‘இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’’ என்று கூறிவிட்டார். 

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஹம்ஸா (29) பின்லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரது மகன். அமெரிக்கா, 2017 ஆம் ஆண்டு இவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஹம்சா குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com