வேலை செய்யாமல் ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்.. டெக்னாலஜி மூலம் கண்டுபிடித்த நிறுவனம்! சுவாரஸ்ய பின்னணி!

அமெரிக்க வங்கியான வெல்ஸ் பார்கோ, வேலை பார்ப்பதுபோல் நடித்த 12-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
model image
model imagex page
Published on

உலகில் நிரந்த வேலை கிடைப்பது என்பதே அரிதாகிவிட்ட காலத்தில், கிடைத்த வேலையையும் தக்கவைக்க விரும்பாத சிலர், போலியாக நடித்தபடி வேலை பார்க்கின்றனர். தொழில்நுட்பம் பெருகிய இந்தக் காலத்தில், அப்படி ஏமாற்றுபவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை நிறுவனம் வேலையிலிருந்து நீக்கி வருகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் அமெரிக்காவின் Wells Fargo வங்கி நிறுவனத்திலும் நடைபெற்றுள்ளது.

Wells Fargo என்பது அமெரிக்காவின் ஒரு நிதிசார்ந்த நிறுவனம். இது, 35 நாடுகளில் இயங்குவதுடன், உலகம் முழுவதும் 70 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த வங்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை, அந்நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தின்போது வீட்டில் இருந்தே பணியமர்த்தக் கூறியுள்ளது. அதன்படியே அவர்களும் பணிபுரிந்துள்ளனனர். இந்த நிலையில், அதில் சிலர் பணி செய்வதாகப் போலியாக நடித்தபடி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்படி ஏமாற்றி 12க்கும் மேற்பட்டவர்களைப் பணியில் இருந்து அந்த நிறுவனம் தூக்கியுள்ளது.

இதையும் படிக்க: ’லவ்வரோட அப்பா போட்ட கண்டிஷன்..’ சுவாரஸ்ய பதிவுடன் வேலை கேட்டு விண்ணப்பித்த நபர்.. #Viral

model image
மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்!

தற்போது பல நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தை வைத்து தங்களது ஊழியர்கள் முறையாக வேலை பார்க்கின்றனரா என்பதை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், ஊழியர்களை தொடர்ந்து வீடியோ காலில் பேசச் சொல்வது, பணியின்போது ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கச் சொல்வது, கீபோர்டு ஸ்ட்ரோக்குகளை பதிவு செய்யச் சொல்வது, கண் விழி அசைதலை பதிவு செய்யச் சொல்வது உள்ளிட்டவற்றின் மூலம் அவர்கள் தொடர்ந்து வேலை செய்கின்றனரா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆனாலும் இந்த நடைமுறையை மீறுவதற்கு இப்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. மவுஸ் ஜிக்லர்ஸ் என்ற டெக்னாலஜி மூலம் தங்களது கம்ப்யூட்டர்கள் பயனில் இருப்பது போன்ற தோற்றத்தை ஊழியர்கள் ஏற்படுத்தி, வேலை செய்வதாக நடித்துள்ளனர். அந்த வகையில்தான், தற்போது இந்த விஷயம் தெரியவந்து, அவர்களை Wells Fargo வங்கி நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. இடித்த கார்ப்பரேஷன்!

model image
ஒரே மாதத்தில் 90,000 பேர் பணி நீக்கம்; 2023ம் ஆண்டு ஆரம்பமே இப்படியே! அதிர்ச்சி ரிப்போர்ட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com