தைவானில் புதிய அதிபராகிறார் அமெரிக்க ஆதரவு ஆளும் கட்சி வேட்பாளர் லாய் சிங் டி! சீனாவுக்கு பின்னடைவா?

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற தைவானின் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான Lai Ching-te அதிக வாக்குகளை பெற்று புதிய அதிபராகிறார்.
தைவான்
தைவான்முகநூல்
Published on

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற தைவானின் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான Lai Ching-te அதிக வாக்குகளை பெற்று புதிய அதிபராகிறார்.

தைவான் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை அதிபர் வில்லியம் லாய் சிங் டி (Lai Ching-te ) போட்டியிட்டார்.

அவருக்கு எதிராக சீன ஆதரவு பெற்ற கோமிண்டாங்கைச் (Kuomintang) சேர்ந்த ஹவ் யொ-ஹி (HOU YU-IH) தைவான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கோ வென் ஜி (KO WEN-JE) ஆகியோர் போட்டியிட்டனர்.

தைவான்
காவல்துறை தாக்குதல்.. ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்த சிலமணிநேரங்களில் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் லாய் சிங் டி வெற்றிபெற்றுள்ளார். தைவான் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொள்ளும்நிலையில், தங்களுக்கு உரிமையானது என்று சீனா தொடர்ந்து கூறிவருகிறது. இதனால் தனது ஆதரவு பெற்ற ஹவ் யொ-ஹி வெற்றிபெறுவார் என்று சீனா நம்பியிருந்தது. மேலும் இந்த அதிபர் தேர்தல், போருக்கான பாதையை வகுக்கப்போகிறதா? அமைதிக்கானதா என்று சீனா எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான லாய் சிங் டி வெற்றிபெற்றிருக்கிறார். இதன் மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நடந்த தைவான் அதிபர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com