6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு?

6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு?
6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு?
Published on

கடந்த 2015-ஆம் ஆண்டு 6 ஆயிரம் ட்விட்டர் பயனர்கள் குறித்து சவுதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அலி அல்சபரா மற்றும் அஹ்மத் அபவும்மோ ஆகியோர் சவுதி அரச குடும்பத்தில் பணிபுரிந்த அஹ்மத் அல்முத்தெய்ரி என்பவருடன் இணைந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி 6ஆயிரம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவை கசிந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 

இவர்கள் அனைவரும் சவுதி அரேபிய அரசு குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்தவர்களாவர். இதுதொடர்பாக வாஷிங்டனில் வசித்துவந்த அஹ்மத் அபவும்மோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இருவரும் சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சவுதி அரேபியாவிற்கு வழங்கிய ஊழியர்களுக்கு அந்நாட்டு அரசு பரிசுத்தொகை வழங்கியதாக அமெரிக்கா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. இந்த புகாருக்கு சவுதி தூதரகம் பதிலளிக்கவில்லை. இந்த தகவலை கண்டுபிடித்து தெரிவித்த FBI ஐக்கு நன்றி தெரிவித்துள்ள ட்விட்டர் நிர்வாகம், வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமலிருக்க தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com