மத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் காணாத அளவிற்கான வெள்ளப்பெருக்கால் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. ஆஸ்திரியா, ரொமேனியா, செக் குடியரசு மற்றும் போலந்து நாடுகளில் கனமழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் ரொமேனியா மற்றும் போலந்தில் தலா 7 பேர், ஆஸ்திரியாவில் 5 பேர், செக் குடியரசில் 3 பேர் உயிரிழந்தனர். செக் மற்றும் போலந்தில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் சூழல் நிலவுகிறது.
அதேநேரம், வரலாறு காணாத அளவுக்கு அமேசான் நதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. அமேசானின் முக்கிய கிளைநதியான Solimoes இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான நீர்மட்டத்தை அடைந்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஹெலிகாப்டரில் இருந்தபடி பதிவு செய்த காட்சிகளில் Solimoes நதியின் கிளை ஆறான Tefe முற்றிலும் வறண்டிருப்பதை காணமுடிகிறது.