வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விதித்திருக்கிறது.
வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடையை ஐ.நா. பாதுகாப்பு அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு 15 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. வட கொரியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத் தாது, காரீயம், கடல் உணவுகள் போன்றவற்றைக் குறிவைத்து இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் வட கொரியாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படும் என ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே தெரிவித்தார். ஏவுகணைச் சோதனைக்காக ஒரு நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் இதுவே மிகவும் பெரியதாகும்.