“உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது; ஆப்கான் மக்களை கைவிடமுடியாது” - ஐ.நா பொதுச்செயலாளர்

“உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது; ஆப்கான் மக்களை கைவிடமுடியாது” - ஐ.நா பொதுச்செயலாளர்
“உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது; ஆப்கான் மக்களை கைவிடமுடியாது” - ஐ.நா பொதுச்செயலாளர்
Published on

ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவசர யுஎன்எஸ்சி கூட்டத்தில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர், “ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கான் மக்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கான் மாறாமலிருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை. ஆப்கானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அனைத்துக் கட்சிகளும் குறிப்பாக தலிபான்கள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோதலால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்

ஆப்கானிஸ்தான் மக்கள் பெருமைக்குரியவர்கள். அவர்கள் தலைமுறை தலைமுறையாக போர் மற்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். ஆப்கான் மக்கள் எங்கள் முழு ஆதரவுக்கு தகுதியானவர்கள். அடுத்து வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும். உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்களை நம்மால் கைவிட முடியாது” என்றார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். நகரப் பேருந்துகளில் ஏறுவதற்கு முண்டியடிப்பது போல், பலர் விமானத்தில் ஏற முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விமான நிலையத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com