ரோஹிங்ய விவகாரம் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை கூடுகிறது ஐ.நா

ரோஹிங்ய விவகாரம் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை கூடுகிறது ஐ.நா
ரோஹிங்ய விவகாரம் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை கூடுகிறது ஐ.நா
Published on

மியான்மரில் நடந்து‌வரும் வன்முறை தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் வியா‌ழக்கிழமை கூடுகிறது.

வங்கதேசத்துக்கு அடைக்கலமாக செல்லும் ரோஹிங்ய இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கான கூட்டத்தை கூட்டும்படி பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஐ.நா.சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன், மியான்மரில் இனப் படுகொலை நடந்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதைத் தடுக்க சர்வதேச நாடுகளும், ஐ.நா.வும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். துருக்கி‌ அதிபர் தயிப் எர்டோகனும் தனது உரையில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சூழலில் ஐ.நா.வுக்கான மியான்மர் தூதர் ஹாவோ தோ சுவான், இனப்படுகொலையில் ராணுவம் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், மனித உரிமைகள்‌ மற்றும் சுதந்திரத்துக்காக போராடிய மியான்மர் தலைவர்கள் அந்த கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com