ஐநா கிளாஸ்கோ மாநாடு: கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்க ஜி20 நாடுகள் முடிவு

ஐநா கிளாஸ்கோ மாநாடு: கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்க ஜி20 நாடுகள் முடிவு
ஐநா கிளாஸ்கோ மாநாடு: கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்க ஜி20 நாடுகள் முடிவு
Published on

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடங்கியுள்ள நிலையில், கரியமிலவாயு வெளியேற்றத்தை இந்த நூற்றாண்டின் மத்திக்குள் குறைக்க ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகள் பங்கேற்கும், ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ சென்றடைந்தார். முன்னதாக இத்தாலியின் ரோம் நகரில், ஜி20 நாடுகளின் உசச்சி மாநாடு நடைபெற்றது. அதில், கிளாஸ்கோ மாநாட்டிற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்த ஜி20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை.

ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, இந்தோனேஷியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று காலநிலை மாற்ற பாதிப்பு குறித்து விரிவாக ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com