ரஷ்யப் படையினரால் உக்ரைன் ஆண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்!

ரஷ்யப் படையினரால் உக்ரைன் ஆண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்!

ரஷ்யப் படையினரால் உக்ரைன் ஆண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்!
Published on

ரஷ்யப் படையினரால் உக்ரைன் ஆண்களும், சிறுவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் ரஷ்யப் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு மத்தியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களில் ஆண்களும் சிறுவர்களும் இருப்பதாக ஐநா அறிக்கைகள் காட்டுகின்றன. இதுபோன்ற பல வழக்குகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வருவதாக ஐ.நா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"உக்ரைனில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து எனக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன, இன்னும் அவை சரிபார்க்கப்படவில்லை" என்று போரில் நடைபெற்ற பாலியல் வன்முறை தொடர்பாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் கிய்வில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

"மற்ற காரணங்களுக்கிடையில் களங்கம் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகாரளிப்பது கடினம். ஆனால் பாலியல் வன்முறை வழக்குகளைப் புகாரளிக்க பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த பாதுகாப்பான இடத்தை உருவாக்க வேண்டும். பெண்களைக் காட்டிலும் ஆண்களும் சிறுவர்களும் புகாரளிப்பது மிகவும் கடினம்" என்று அவர் கூறினார்.

உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா, ரஷ்ய துருப்புக்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை பற்றிய அறிக்கைகளை தனது அலுவலகம் சேகரித்ததாக தெரிவித்தார். பொது மக்களை பயமுறுத்துவதற்காக ரஷ்யா பாலியல் வன்கொடுமையை ஒரு திட்டமிட்ட உத்தியாகப் பயன்படுத்தியதாகக் கூறினார். இது நிச்சயமாக, உக்ரைனை சரணடையச் செய்ய நிகழ்த்தப்பட்ட அநீதி என்று அவர் குறிப்பிட்டார்.

தப்பிப்பிழைத்த பலர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், பலர் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேச பயப்படுவதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், ரஷ்யப் படைகள் பின்வாங்கியதிலிருந்து பரவலான பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களின் குழுக்கள் சேகரித்து வருகின்றன என்றும் தடயவியல் நிபுணர்கள் வெகுஜன புதைகுழிகளில் உள்ள பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில் சிலர் ரஷ்ய படைகளால் கொல்லப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com