உக்ரைனில் ரஷ்ய படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பெலாரஸில் திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. உடனடியாக ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையோடு உக்ரைன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச்சூழலில், பெலாரஸிலுள்ள எல்லைநகரமான கோமலில் இன்று உக்ரைன், ரஷ்ய பிரதிநிதிகள் பங்கேற்கும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள உளவு அலுவலகங்களுக்கு அருகே வசிப்பவர்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. கீவை நோக்கி தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்கிவையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு ரஷ்ய ராணுவம் தாக்கி வருகிறது.