ஒரு பக்கம் நேரடி போர், மறுபக்கம் சைபர் தாக்குதல் - ஸ்தம்பித்த உக்ரைன்

ஒரு பக்கம் நேரடி போர், மறுபக்கம் சைபர் தாக்குதல் - ஸ்தம்பித்த உக்ரைன்
ஒரு பக்கம் நேரடி போர், மறுபக்கம் சைபர் தாக்குதல் - ஸ்தம்பித்த உக்ரைன்
Published on

உக்ரைனில் ராணுவத் தளங்கள், துறைமுகங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதுடன் இணையதள முடக்கத் தாக்குதலுக்கும் உக்ரைன் உள்ளாகியுள்ளது.

உக்ரைன் அரசு இணைய தளங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய அமைப்புகளின் இணைய கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புள்ளி விவரத் தகவல்களை அழித்தொழிக்கும் மால்வேர் நூற்றுக்கணக்கான கணினிகளில் பரவச் செய்யப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எனினும், எத்தனை நெட்வொர்க் புள்ளி விவர அழிப்பை சந்தித்துள்ளது, எத்தனை அரசுத் துறைகள், அமைப்புகளின் இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரவில்லை.

உக்ரைன் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள லாட்வியா, லிதுவேனியா நாடுகளிலும் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகள் கடந்த 3 மாதங்களாகவே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் தகவல் தொழில்நுட்பத் துறையின் பதிலடியாக, ரஷ்யாவின் சில பகுதிகளிலும் இணையதள சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாம்: உக்ரைனுக்கு ஆதரவாக ஜொலிக்கும் பாரிஸ் நகர கட்டடங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com