உக்ரைனில் ஒரே நாளில் 1,260 நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, அந்நாட்டில் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியது. கிழக்குப் பகுதியான டான்பாஸ் பகுதியிலும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் 1,260 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.
மேலும், மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள், ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் உயிருடன் காக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் ரஷ்யாவின் முயற்சி வெற்றி பெறாது என்றும், அவர்களை உறுதியாக தடுத்து நிறுத்துவோம் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.