உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தின் மீது குறைவான உயரத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை பறந்து சென்றதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
Pivdennoukrainska என்பது உக்ரைனின் இரண்டாவது பெரிய அணுமின் நிலையமாகும். இது மைகோலேவ் பிராந்தியத்திற்கு அருகில் உள்ளது. இது தலைநகர் கியேவில் இருந்து 350 கிமீ தொலைவில் தெற்கே அமைந்து உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் மீது ரஷ்ய ஏவுகணை ஒன்று குறைவான உயரத்தில் தாக்குதல் நடத்துவதற்காக பறந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனின் அரசு நடத்தும் அணுசக்தி ஆபரேட்டர் Energoatom, நேற்று காலை ஒரு பெரிய அணுமின் நிலையத்தின் மீது ஒரு ரஷ்ய ஏவுகணை "மிகவும் குறைவாக" உயரத்தில் பறந்து சென்றதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஏவுகணை தலைநகர் கிய்வ் திசையில் ஏவப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அணுமின் நிலையத்தின் மீது குறைவான உயரத்தில் ஏவுகணை செலுத்தியது குறித்து ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் தற்போது வரை தரப்படவில்லை.