உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரஷ்யாவின் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
உக்ரைன் ராணுவம் விரைவில் தாக்குதல் நடத்தப்போவதாக குற்றம்சாட்டி 7 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றயுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இது போன்ற தாக்குதல் எதையும் நடத்த திட்டமிடவில்லை என உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது. பலருக்கும் தங்களது உடைமைகளை கூட எடுத்துக்கொள்ள நேரம் அளிக்கப்படாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே டோனெட்ஸ்க் மற்றும் அருகில் உள்ள லுஹான்ஸ்க் பகுதிகளிலிருந்து சுமார் 30,000 பேர் எல்லையை கடந்து ரஷ்யாவுக்குள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.