பப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவரிடம் இருந்து, இளம் மனைவி விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். மணமேடையிலேயே, மணமகன் பப்ஜி விளையாடும் அளவுக்கு இந்த விளையாட்டு அடிமைபடுத்தி வைத்திருக்கிறது ஆட்களை! சில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்குத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பப்ஜி விளையாடக் கூடாது என்று சொன்ன கணவரிடமிருந்து விவகாரத்து கேட்டிருக்கிறார் இளம் மனைவி. அங்குள்ள அஜ்மான் நகர போலீஸ் அதிகாரி, வாஃபா கலீல் அல் ஹோசானி இதை உறுதிப் படுத்தியுள்ளார்.
இருபது வயது இளம் பெண்ணான அவர் எப்போதும் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார். இதை கணவர் கண்டித்துள்ளார். அவரால் விளையாட்டை விட முடியவில்லை. கணவர் கடுமையாக நடந்து கொள்ள, அந்தப் பெண் கணவரை கைவிட முடி வெடுத்து, விவாகரத்து கேட்டிருக்கிறார்.
தான் விரும்பும் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக வும் பப்ஜியை தனது நண்பர்களுடனும் உறவினர்களுடமே விளையாடுவதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். கணவர் தனக்கு எந்த சுதந்திரத்தையும் தரவில்லை என்றும் அவர் புகார் கூறியிருக்கிறார்.