தொடர் ‌தாக்குதல்களால் இலங்கையில் நீடிக்கும் பதற்றம்..!

தொடர் ‌தாக்குதல்களால் இலங்கையில் நீடிக்கும் பதற்றம்..!
தொடர் ‌தாக்குதல்களால் இலங்கையில் நீடிக்கும் பதற்றம்..!
Published on

இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கொழும்பு புறநகரான வெள்ளவத்தையில் ஆட்டோவில் கடத்தி சென்ற c4 என்ற வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கை ஈஸ்டர் திருநாளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் துயரத்தில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் நிலையில், அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் வெடிகுண்டுகள் பதற்றத்தை தணியவிடாமல் செய்கின்றன. குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகளை நாடு முழுவதும் தேடும் இலங்கை காவல் மற்றும் பாதுகாப்புப்படையினர், இதுவரை கைது செய்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.

இதனிடையே இலங்கையில் வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப்படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பாதுகாப்புப்படையினருக்கும், வீட்டில் இருந்தவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர். 

அதேநேரம் வீட்டிற்குள் இருந்த 4 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தங்களை வெடிக்கச்செய்துகொண்டனர். இதில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் பலியான நிலையில், மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சாய்ந்தமருது பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் அதிரடிப்படையினர் ஆய்வு நடத்தினர். இதுதவிர இலங்கை முழுவதும் வாகனங்களையும் இயக்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன் அனுமதி பெற்ற பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், வாகனங்களில் பயணிப்போர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com