ட்விட்டர் சிஇஓவின் கணக்கையே ஹேக் செய்த மர்மநபர்கள்!

ட்விட்டர் சிஇஓவின் கணக்கையே ஹேக் செய்த மர்மநபர்கள்!
ட்விட்டர் சிஇஓவின் கணக்கையே ஹேக் செய்த மர்மநபர்கள்!
Published on

ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்தனர். 

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கை மர்மநபர்கள் நேற்று மதியம் ஹேக் செய்தனர். ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கில் இருந்து இனத்தூண்டல் தொடர்பான அவதூறு தகவல்கள் பகிரப்பட்டன. 10 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த ட்வீட்கள் பின்னர் தானாகவே அழிக்கப்பட்டன.

பின்னர் இது குறித்து தகவல் வெளியிட்ட ட்விட்டர், ''ஜாக்கின் கணக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது. ட்விட்டரின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் உள்ளன.  ட்விட்டர் பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. ட்விட்டருடன் இணைக்கப்பட்ட செல்போன் மூலமாக ஹேக் செய்யட்டது. க்ளவ்ட்ஹோப்பர் வழியாக ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள்  ஊடுருவினர்’’ என தெரிவித்துள்ளது. முதலில் ஜாக் டோர்சேவின் செல்போன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் வாயிலாக ட்வீட் பதிவாகும்படி ஹேக் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் சிஇஓவின் கணக்கே ஹேக் செய்யப்பட்ட செய்தி ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் மூலம் ட்விட்டரின் பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com