கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்! என்ன சாதனைக்காக தெரியுமா?

கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்! என்ன சாதனைக்காக தெரியுமா?
கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்! என்ன சாதனைக்காக தெரியுமா?
Published on

உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.

பொதுவாக, இரட்டையர்கள் ஒரேமாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்களைக் கொண்டிருப்பர். ஆனால், யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி ஆகிய சகோதரிகள் இதில் வித்தியாசமானவர்கள். ஜப்பானில் உள்ள ஒகாயாமா நகரத்தைச் சேர்ந்த இவர்கள், அக்டோபர் 15, 1989இல் பிறந்துள்ளனர். இருவரும், 2 அடி மற்றும் 5.5 அங்குலம் (75 சென்டிமீட்டர்கள்) உயர வித்தியாசத்தைக் கொண்டுள்ளனர். இதில் யோஷி என்பவர் 162.5 செமீ உயரத்தை (5 அடி 4 அங்குலம்) கொண்டிருக்கிறார். மிச்சி என்பவர் 87.5 செமீ உயரத்தைக் (2 அடி 10.5 அங்குலம்) கொண்டிருக்கிறார். இதன்மூலம் உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட மகளிர் இரட்டையர் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

இவர்களது உயரம், தகுதி வாய்ந்த மருத்துவர் குழுவைக் கொண்டு காலை, மதியம், மாலை என உணவுக்குப் பிறகு அளக்கப்பட்டுள்ளதாம். அதன்படியே, அவர்கள் கின்னஸுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களது சாதனை, அதிகாரப்பூர்வமாக கின்னஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் மிச்சி மட்டும், தற்போது அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். யோஷிக்கு திருமணமானதால், அவரது கணவர் வீட்டில் வசிக்கிறார்.

உயரம் குறைவாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மிச்சி, “கடந்த 2012-ம் ஆண்டில், உலகின் மிகவும் குட்டையான மனிதர் ஒருவரைப் பற்றிய வரலாறு படித்தேன். அது, என் மனதைக் கலங்கச் செய்தது. அதேநேரம், அவருடைய குணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதுவொருபுறம் என்றால், என் உயரம் குறித்து நான் கவலைப்படுகிறேன்” எனத் தெரித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com