துருக்கியைச் சேர்ந்த 24 வயது பெண், உலகிலேயே உயரமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உலகளவில் பல சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இந்தாண்டுக்கான உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 215.16 செண்டிமீட்டர் அதாவது 7 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட கெல்கி வளர்சிதை மாற்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர் இவ்வளவு உயரம் வளர்ந்திருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் கெல்கியால் WALKER உதவியுடன் சிறிது தூரம் மட்டுமே நடக்க முடியும்.
இதுகுறித்து ரமிசா கெல்கி கூறுகையில் , 'நான் ஸ்கோலியோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதால் அதீத உயரத்தை அடைந்தேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால் சக்கர நாற்காலியின் உதவியின்றி எங்கும் செல்லமுடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.