இஸ்ரேல் - காஸா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. 7ம் தேதி அன்று தொடங்கிய இந்த போரில் 3,600 குழந்தைகள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் கோர தாக்குதல் காரணமாக, காஸா பகுதியே நரகமாக மாறி வருகிறது. குறிப்பாக, மருத்துவமனை, கல்வி நிலயங்கள், அகதிகள் முகாம் போன்றவற்றுக்கு கூழ் ஹமாஸ் அமைப்பினர் சுரங்கம் அமைத்து, அதில் பதுங்கிக்கொண்டு இஸ்ரேலை தாக்கி வருவதாக இஸ்ரேல் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மருத்துவமனை, கல்வி நிலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஹமாஸ் படையினரின் சுரங்கமே காரணம் என்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்திருந்த ஹமாஸ் தலைமை நிலைய அதிகாரி, மூஸா அபு மார்சுக், எங்களிடம் இருக்கும் சுரங்கங்கள் அனைத்தும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை.
சுரங்கத்தில் பதுங்கி இருந்துதான் நாங்கள் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறோம். காஸாவில் இருப்பவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் அகதிகள். ஆகையால், அவர்களை காக்க வேண்டியது ஐநாவின் கடமையும் கூட என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைகள், கல்வி நிலயங்கள் போன்றவற்றுக்கு கீழ் சுரங்கங்களை அமைத்து, ஹமாஸ் அமைப்பினர் தங்களை காத்துக்கொள்கின்றனர்.
காஸா மக்கள் காக்க வேண்டியது அவர்களது கடைமைதான் என்று தெரிவித்துள்ளது. அதே போன்று காஸாவின் அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு காரணம் ஹமாஸின் சுரங்கம் தான் என்றும் தெரிவித்துள்ளது.