“கொடூரன் போல் சித்தரிக்கிறார்கள்”: ஊடகங்களைச் சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

“கொடூரன் போல் சித்தரிக்கிறார்கள்”: ஊடகங்களைச் சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
“கொடூரன் போல் சித்தரிக்கிறார்கள்”: ஊடகங்களைச் சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
Published on

ஊடகங்கள் தன்னிடம் நட்பு பாராட்டவில்லை, மாறாக தன்னை கொடூரன் போல சித்தரிக்கின்றன என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் செய்தியாளர்களும் எலியும் பூனையுமாக நடந்துகொள்வது இயல்புதான். காரணம், தான் சொல்வதே சரி என்ற ஆதிக்க மனப்பான்மை ட்ரம்பிடம் உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸால் கொத்துக் கொத்தாக பலர் உயிரிழக்கும் இந்த சூழலிலும் தன் ஆதிக்க மனப்பான்மையை ட்ரம்ப் விட்டுவிடவில்லை எனக் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று தலைகாட்ட தொடங்கிய நிமிடமே அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தால் இத்தனை உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம் என அந்நாட்டு தொற்று நோய் நிபுணர் மருத்துவர் அந்தோணி எஸ். பாசி கூறியிருக்கிறார். மேலும் இரு மாதங்களுக்கு முன்பே நோயின் தீவிரத்தையும், ஆபத்தையும் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அலெக்ஸ் அசாரும் ட்ரம்பிடம் எச்சரித்து இருக்கிறார்.

ஆனால் அது எதையுமே ட்ரம்ப் பொருட்படுத்தவில்லை எனக் குறை கூறப்படுகிறது. தற்போது நிலைமை கைமீறி போனதால் செய்வதறியாது திகைத்து நிற்கும் ட்ரம்ப், கொரோனா விவகாரத்தில் தனக்கு ஆலோசகராக இருந்த தொற்று நோய் நிபுணரான மருத்துவர் பாசியை நீக்கப்போவதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ஊடகங்கள் தன்னிடம் நட்பு பாராட்டவில்லை, மாறாக தன்னை கொடூரன் போல சித்தரிக்கின்றன என குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஊடகங்கள் ஒரு தகவலை எப்படி செய்தியாக்க வேண்டுமோ அது போன்று செய்யவில்லை என்றும், தனக்கு எதிராக எப்பவும் போலி செய்திகளை பரப்பிவருவதாகவும் சாடினார். வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பல தலைவர்களும் பொதுமக்களும் அவரை பெருமையாக பேசும் வீடியோவை போட்டுக் காட்டி, பெருமிதம் கொண்டார் ட்ரம்ப். இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் இதெல்லாம் தேவையா என கேள்வி எழுப்பிய சிபிஎஸ் செய்தியாளரிடம், நீங்கள் போலியான நிருபர், மிகவும் இழிவானவர் என ஆவேசமானார் அதிபர்.

தன் மேலிருக்கும் தவறையும், நாட்டின் நிலைமையும் நினைத்துப் பார்க்காமல் ஒவ்வொரு முறையும் ட்ரம்ப் இவ்வாறு செய்தியாளர்களிடம் சினம் கொள்வது ஊடகங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com