அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் - ட்ரம்ப் உறுதி !

அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் - ட்ரம்ப் உறுதி !
அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் - ட்ரம்ப் உறுதி !
Published on

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில், திட்டமிட்டப்படி நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் அங்கு உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நோய் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிவது அவசியம் என கேட்டுக் கொண்டார். அதே சமயம், தம்மால் முகக்கவசம் அணிந்து நடமாட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பொதுநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மீள அமெரிக்காவுக்கு பல மாதங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால், அந்த கேள்விக்கும் அதிபர் ட்ரம்ப் தற்போதே பதில் அளித்துவிட்டார். கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த நவம்பர் மாதம் நிச்சயம் அதிபர் தேர்தல் நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் ட்ரம்ப். நாள்தோறும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடரும் நிலையில், தேர்தல் விவகாரத்தில் ட்ரம்ப் பிடிவாதமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com