அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்கப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான விவாதம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. ட்ரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காணொலி மூலம் விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஒருமுறை நடைபெற்ற நேரடி விவாதத்திற்கு பிறகு ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று ஓரிரு நாட்களுக்கு முன்புதான் வெள்ளை மாளிகை திரும்பினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்க போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஜோ பைடனை பாதுகாக்கவே காணொலி மூலம் விவாதம் நடைபெறுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.