அமெரிக்க அதிபரை சந்தித்த ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் !

அமெரிக்க அதிபரை சந்தித்த ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் !
அமெரிக்க அதிபரை சந்தித்த ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் !
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து பேசினர்.

வாஷிங்டனில் அதிபர் மாளிகையில் 30 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும் இச்சந்திப்பு மரியாதை ரீதியில் நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பருடன் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுடன் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

இதன் பின் இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான, உடனடியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றிருந்த நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com