அமெரிக்க அதிபர் டரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அறிவிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்தவாரம் அங்கீகரிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய அறிவிப்பு வெளியானால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. தற்போது இஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் இருந்து வருகிறது. ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தமானது என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது.
வரும் வாரம் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தால், டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்ற வாய்ப்புள்ளது. இன்னும் ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்பதற்கான முடிவை அதிபர் ட்ரம்ப் எடுக்கவில்லை. கடைசி நேரத்தில் கூட இந்த முடிவு மாறலாம் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.