அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அந்நாடு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பைடனின் வெற்றியை அங்கீகரிக்க மறுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள், கடந்த 10ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதேபோன்ற தாக்குதல் பைடன் பதவியேற்புக்கு முன்னரும் நிகழ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதம் ஏந்திய வலதுசாரிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக எஃப்பிஐ எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியால் வாஷிங்டனில் 15 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தேசிய காவலர் படை பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். புதிய அதிபராக பதவியேற்கவுள்ள பைடனுக்கும் ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்களுடன் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.