வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு குழுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிர ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது. சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும் வடகொரியா தனது போக்கை மாற்றிக் கொள்ளாதது அமெரிக்காவை ஆத்திரம் அடைய செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும், எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ், ராணுவ தளபதி ஜோசஃப் டன்ஃபோர்ட் உள்ளிட்டோர் ட்ரம்புக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.