அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 51 பேரும், எதிராக 48 பேரும் வாக்களித்தனர். இதனால், மசோதா நிறைவேறியதாக துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். வரி குறைப்பு மசோதா, கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு லாபமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம், நடுத்தர மக்களை இம்மசோதா பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.