அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலில் இருவரின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்பு அண்மையில் நடத்தப்பட்டது.
அக்டோபர் 13 - 20 தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 43 சதவீதம் அமெரிக்கர்கள் டொனால்டு ட்ரம்ப் வெற்றியை விரும்பவில்லை. அதேபோல 41 சதவீத அமெரிக்கர்கள், ட்ரம்ப்தான் மீண்டும் அதிபராக வேண்டும் என்றும் பிடனின் வெற்றியை விரும்பவில்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
மேலும், 22 சதவீத பிடன் ஆதரவாளர்களும், 16 சதவீத ட்ரம்ப் ஆதரவாளர்களும் தங்களுடைய வேட்பாளர்கள் தோற்றால் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.