அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், அந்த அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியாவை சேர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அந்த அமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், இந்தியாவை அணுசக்தி விநியோக அமைப்பில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என அந்த அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அணுசக்தி விநியோக அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இதில், சேர்வதற்காக இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தியாவின் இந்த முயற்சிக்கு எதிராக சீனா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.