அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதையே ரஷ்யா விரும்பும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், பெரும் ராணுவ வலிமையைக் கொண்ட அமெரிக்காவுக்கு தம்மைப் போன்ற வலிமையான ஒருவர் அதிபராவதை ரஷ்யா ஒருபோதும் விரும்பாது எனத் தெரிவித்தார். ஹிலாரி கிளிண்டன் அதிபராகி இருந்தால், அமெரிக்க ராணுவத்தின் வலிமை குறைந்திருக்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.
புடின் விரும்புவதற்கு நேரெதிராகவே எனது நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் தமது வெற்றியை புடின் நிச்சயம் விரும்பமாட்டார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்யா உதவியாக உளவு நிறுவனங்கள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு விளக்கம் கொடுத்திருக்கிறார்.