நாஜிக்களின் புதையல்: 500 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தங்கம், வைரம் கண்டுபிடிப்பு

நாஜிக்களின் புதையல்: 500 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தங்கம், வைரம் கண்டுபிடிப்பு
நாஜிக்களின் புதையல்: 500 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தங்கம், வைரம் கண்டுபிடிப்பு
Published on

ஜெர்மனியில் நாஜிக்களின் 500 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட புதையல் இருக்கும் இடத்தை ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் தங்கம், வைரம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் உட்பட விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களையும், ஒரு ரயில் மூலம் ஜெர்மனியில் இருந்து ஆல்ப்ஸ் மலைப் பிரதேசத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த புதையல் ரயில் பெட்டியை ரஷ்யப் படைகள் கைப்பற்றி, அதை ஒரு குகை ரயில் பாதையிலேயே பாதுகாத்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால், அப்புதையல் பெட்டியை, பாவேரியன் என்ற காட்டுப்பகுதியில் எங்கேயோ மறைத்து வைத்துவிட்டனர்.

கடந்த 70 ஆண்டுகளாக அது குறித்து தெரிந்தவர்கள் பலர், புதையலை அடைய தேடி வந்தனர். அவர்கள் யாருக்கும் புதையல் இருக்குமிடமும், அதற்கான வரைபடமும் கிடைக்கவில்லை. ஆனால் இதுகுறித்து நிறைய ஆய்வு செய்த, 76 வயதான ஹேன்ஸ் குலுஎக் என்பவர், வரைபடத்தை சரியாக புரிந்துகொண்டு, புதையல் இருக்கும் சரியான இடத்தை கண்டறிந்துள்ளார்.

புதையல் ஜெர்மனியில் பாவேரியன் காட்டுப்பகுதியில் உள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால் அந்த இடத்தின் சொந்தக்காரர், புதையலைத் தோண்டி எடுக்க ஹேன்ஸ்-க்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார். இடத்தின் உரிமையாளர் புதையலை அனைத்தையும் தானே தோண்டி எடுத்துக்கொள்ளப் போவதாக கூறி வருகிறார். ஆனால், வரைபடத்தை சரியாக புரிந்து கொண்டு, புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இடத்தின் உரிமையாளர் கூறுவது, குருடன் மச்சத்தை தேடுவது போன்றது என்று ஹேன்ஸ் கூறுகிறார். மேலும் புதையலை தோண்டி எடுக்க அரசிடமும், உரிய துறையிடமும் ஹேன்ஸ் அனுமதி கேட்டுள்ளார். புதையல் எடுக்கப்பட்டால், அதன் தற்போதைய மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com