தினமும் தாயகம் திரும்பும் 3 ஆயிரம் இந்தியர்கள்... விமானப் பயணங்களில் இயல்பு நிலை

தினமும் தாயகம் திரும்பும் 3 ஆயிரம் இந்தியர்கள்... விமானப் பயணங்களில் இயல்பு நிலை
தினமும் தாயகம் திரும்பும் 3 ஆயிரம் இந்தியர்கள்... விமானப் பயணங்களில் இயல்பு நிலை
Published on

சில நாட்களாக ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விமானப் பயண நடைமுறைகளில் இரு நாடுகளும் செய்துள்ள மாற்றங்களின் விளைவாக இயல்பு நிலை திரும்பிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானப் பயணிகளின் உயர்வால் பயண ஏற்பாட்டாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். "அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான அனுமதியை எளிதாகப் பெறுகிறார்கள். விசிட் விசா பெற்றவர்கள் வருவதற்கும் எந்த தடைகளும் இல்லை " என்கிறார் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால்.

அதேபோல கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் இந்தியவர்களின் வருகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும், விமானங்கள் அதிக பயணிகளுடன் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா - ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள விமானப் பயணம் தொடர்பான ஒப்பந்தம் காரணமாக இந்தியப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com