எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 37 பேர் உயிரிழப்பு

எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 37 பேர் உயிரிழப்பு
எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 37 பேர் உயிரிழப்பு
Published on

எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும் 120 பேர் காயமடைந்தனர். 

தலைநகர் கெய்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலும், போர்ட் சைட் நகரில் இருந்து கெய்ரோ நோக்கி வந்த ரயிலும் அலெக்சாண்ட்ரியா நகரை அடுத்த கோர்ஷிட் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து பயணிகளை மீட்டனர். 75 ஆம்புலன்ஸ்கள் சிகிச்சைக்காக பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. தவறான சிக்னல் தரப்பட்டதன் காரணமாக ரயில்கள் மோதியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எகிப்தில் ரயில் விபத்துகள் அடிக்கடி நேரிடுவதுண்டு. கடந்த ஆண்டில் கெய்ரோவில் நடந்த விபத்தில் 5 பேரும், 2013ல் கிசா நகரில் ரயில் தடம்புரண்டதில் 19 பேரும் உயிரிழந்தனர். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com