சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன் முறையாக, தனியார் ராக்கெட் மூலம் சுற்றுலா சென்றவர்கள் வெற்றிகரமாக இலக்கை அடைந்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சுமார் ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவு செய்து 3 பணக்காரர்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களை வழிநடத்த, முன்னாள் விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் என்பவரும் அவர்களுடன் பயணித்துள்ளார். இவர்கள் இருந்த எண்டவர் என்ற விண்களம், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு வெற்றிகரமாக இணைந்தது.
அதனை தொடர்ந்து, அங்கிருந்த வீரர்கள் சுற்றுலா பயணிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இவர்கள் 8 நாட்கள் தங்க உள்ளனர். நாசாவுடன் இணைந்து ஆக்ஸியம், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் விண்வெளி நிறுவனங்கள் இந்த விண்வெளிச்சுற்றுலாவை சாத்தியப்படுத்தி உள்ளன. இந்த வெற்றியை தொடர்ந்து, விண்வெளியில் தனியாக ஒரு ஆராய்ச்சி மையத்தை அமைக்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.