தக்காளி திருவிழா
தக்காளி திருவிழாFacebook

ஸ்பெயினில் களைகட்டிய ”தக்காளி திருவிழா”- ஒருவர் மீது ஒருவர் தக்காளி அடித்து உற்சாக கொண்டாட்டம்!

ஸ்பெயினில் கோலாகலமாக நடந்த தக்காளி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Published on

ஸ்பெயினில் கோலாகலமாக நடந்த தக்காளி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பினோல் நகரில் நடந்த லா டொமாடினா எனப்படும் தக்காளி திருவிழாவில் ஒரு டிரக்கில் கொண்டு வரப்பட்ட தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூழாக்கப்பட்ட தக்காளி ஜூஸில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்களுக்கான நூதன விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

தக்காளி திருவிழா
காலை தலைப்புச் செய்திகள்|அமெரிக்கா சென்ற முதலமைச்சர் to ஜெய்ஷாவை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

1945-ஆம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் குழந்தைகள் தக்காளியை வீசியெறிந்து விளையாடியதே இந்த திருவிழாவிற்கான ஆரம்பப்புள்ளி எனக் கூறப்படுகிறது. ஸ்பெயினில் பிரபலமான இந்த தக்காளி சண்டை திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தக்காளி திருவிழாவிற்காக சுமார் 150 டன் கணக்கில் தக்காளி பயன்படுத்தப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com