நாசிப் படையின் தலைவர் அடால்ப் ஹிட்லரிடமிருந்து அமெரிக்க படைவீரர் திருடிய பொருள் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. எப்படியும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என அந்த பொருளை ஏலத்தில் விட உள்ள நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஹிட்லர் இரண்டாம் உலக போரின்போது தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜெர்மனியில் அமைந்திருந்த அவரது வீட்டில் (THE BERGHOF) இருந்து ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் சீட்டை அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த படைவீரர் ஒருவர் திருடியுள்ளார். அதுதான் இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது. ஹிட்லர் முதலாம் உலக போரின்போது பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடை மற்றும் அவரே கைப்பட வரைந்த இரண்டு ஓவியங்களையும் அந்த அமெரிக்க வீரர் திருடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அந்த ஏல நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.