அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இதில், டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரீஸ் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கெண்டகி, இண்டியானா, வெர்மாண்ட் மாகாணங்களில் முதல் கட்ட முடிவுகளில், 54 விழுக்காடு வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை.
நியாயமான முறையில் தேர்தல் நடந்து தோல்வியடைந்தால் அதை ஏற்பேன் என குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதுவனாலும் இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை.
திமுகவுக்கு இருக்கும் அமைப்பு ரீதியான கட்டமைப்பு வேறு கட்சிக்கு இல்லை என 7ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க உழைக்கும்படி தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு.
தவெக மாநாட்டுக்கு வாகனம் இயக்கியவர்களுக்கு ஊதியத்தை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு பாக்கியை கேட்டால் கட்சி நிர்வாகி கொலை மிரட்டல் விடுவதாக காவல் ஆணையகரத்தில் புகார்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் தங்கத்தேரில் எழுந்தருளிய ஜெயந்திநாதர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத் தேரை இழுத்தனர்.
துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சனத்தை ஊக்குவிப்பாகவே பார்க்கிறேன் என ஆந்திரா உள்துறை அமைச்சர் அனிதா திட்டவட்டம்.
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கவர்ச்சிகராமான ஜார்க்கண்டில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இந்தியா கூட்டணி.
நவம்பர் 24, 25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடக்கிறது ஐபிஎல் ஏலம். 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல்.
வடக்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்... இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 35 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.