காலை தலைப்புச் செய்திகள்|அதிபர் தேர்தலிலிருந்து விலகிய ஜோ பைடன் To முடிவுக்கு வந்தது வங்கதேச வன்முறை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அதிபர் தேர்தலிலிருந்து விலகிய பைடன் முதல் முடிவுக்கு வந்த வங்கதேச வன்முறை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • சொந்தக் கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்களின் காரணமாக . அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருந்து விலகினார் ஜோ பைடன்.

  • ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை முன்மொழிந்தார் பைடன். மேலும், அனைவரும் ஒன்று கூடி டிரம்பை வீழ்த்த வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • அதிபராக பதவி வகிக்கவும் பைடன் தகுதியில்லாதவர் என்றும், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக் காட்டுவோம் என்றும் டிரெம்ப் சூளுரை.

  • நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்றும், நிதிநிலை அறிக்கை நாளையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

  • நீட் முறைகேடு, அக்னிவீர் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்.

  • கல்வராயன் மலைப்பகுதியில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடன் சென்று ட்ரோன் கேமரா மூலம் திடீர் ஆய்வு செய்தார்.

  • பௌத்த தளங்களில் ஆம்ஸ்ட்ராங் செய்த பணிகளை தொடர வேண்டும் என படத்திறப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு.

  • கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் சிக்கித் தவித்த 49 மாணவர்கள் தமிழகம் திரும்பினர்.மேலும், 77 பேர் இன்று வருவார்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டியளித்துள்ளார்.

  • சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலியாக வங்கதேசத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.

  • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் முன்னணி வீரர் நடாலை வீழ்த்தி போர்ச்சுகல்-லின் போர்கஸ் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com