வெள்ளை மாளிகையின் முதல் கருப்பின அதிபர் ஒபாமாவின் பிறந்தநாள் இன்று!

வெள்ளை மாளிகையின் முதல் கருப்பின அதிபர் ஒபாமாவின் பிறந்தநாள் இன்று!
வெள்ளை மாளிகையின் முதல் கருப்பின அதிபர் ஒபாமாவின் பிறந்தநாள் இன்று!
Published on

நிறவெறிகொண்ட அமெரிக்காவில் முதல் கருப்பின அதிபரான பாரக் ஒபாமாவின் 59-வது பிறந்தநாள் இன்று. சமீபத்தில்தான் அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர், நிறவெறிகொண்ட காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 2020-ஆம் ஆண்டிலும் வல்லரசு நாடான அமெரிக்காவில் நிறவெறி பார்க்கப்படுவது உலக நாடுகளால் கண்டிக்கப்படுள்ளது. அப்படிப்பட்ட நிறவெறிகொண்ட நாட்டில் முதல் கருப்பின அதிபராக பாராக் ஒபாமா இரண்டுமுறை தேர்வு செய்யப்பட்டது வரலாற்றில் மறக்க முடியாத வேறலெவல் நிகழ்வு.

என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் நிறவெறி சர்ச்சைகளால் எப்போதும், மனிதநேயத்தில் அமெரிக்கா பின்தங்கியே இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டில் ஒபாமா அதிபரானது ஆச்சர்யம்தான்.

கடந்த 1961 ஆம் ஆண்டு கென்யாவில் பிறந்த ஒபாமாவின் அப்பா ஒரு கருப்பினத்தவர். அம்மா ஆதிக்கம் செலுத்தும் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞர், பேராசிரியர் என்று இவருக்கு பல்வேறு முகங்கள் உண்டு. கடந்த 2008அதிபரானபோது,  அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபர்  என்ற பெருமையப் பெற்றார். அதற்கடுத்து 2012 ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் சிறப்பாக அமெரிக்க அதிபராக பதவியில் இருந்த ஒபாமா, விலகும் சமயத்தில்  “இனவாதம் அமெரிக்க சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக உள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன்தான், வரும் நவமபரில் வரவிருக்கும் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com