#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!

#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
Published on

அமெரிக்காவில் வெள்ளை மேலாதிக்கம், உள்நாட்டு பயங்கரவாதத்தை வீழ்த்துவோம் என 46-ஆவது அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடன், முதல் உரையில் சூளுரை

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரானார் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ். பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில் மக்கள் கொண்டாட்டம்.

பதவியேற்றதும் அதிபருக்கான பணிகளைத் தொடங்கினார் ஜோ பைடன். பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய ஒப்புதல்.

ஜோ பைடனின் பதவியேற்பில் பங்கேற்காமல் வெளியேறினார் டொனால்டு ட்ரம்ப். ஏதோ ஒரு வடிவத்தில் மீண்டும் வருவேன் என சொந்த ஊர் திரும்பும் முன் பேச்சு.

ஆட்சியில் தவறுகள் இழைத்தால் ஒப்புக்கொள்வேன் என அதிபர் பைடன் அறிவிப்பு. தவறுகள் செய்தால் பொறுப்பேற்க தயங்கப் போவதில்லை என்றும் உறுதி.

புதிய அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக ட்விட்டரில் பதிவு.

உடல் நலம் குன்றிய சசிகலா பெங்களூரு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. 27 ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க உச்ச நீதிமன்றம் வேண்டுகோள். வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் போராட்டத்தை தொடரலாம் என்றும் கருத்து.

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவை ஏற்க விவசாயிகள் மறுப்பு. இருதரப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கத் திட்டம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com