ஓரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதையும், இணைந்து வாழ்வதையும் அறிந்திருப்போம். ஆனால் மூன்று ஆண்கள் சேர்ந்து திருமணம் செய்துகொண்ட புதுமையான சம்பவம் கொலம்பியாவில் நடந்துள்ளது.
ஒரு பாலினத் திருமணத்துக்கு அண்மைக் காலமாக பல நாடுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளித்து வருகின்றன. தென் அமெரிக்க நாடான கொலம்பியா இன்னொருபடி மேலே சென்று, மூன்று ஆண்கள் செய்து கொண்ட மிகவும் மாறுபட்ட திருமணத்தை அங்கீகரித்திருக்கிறது. இதற்கான ஆவணங்களில் மூன்று பேரும் கையெழுத்திட்டனர். இவர்களில் ஒருவர் கணவராகவும், மற்றவர்கள் அவருடைய துணைவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். கொலம்பியாவில் மூன்று பேர் செய்து கொள்ளும் திருமணம் ஆங்காங்கே நடைபெறுவதாகக் கூறப்படுவதுண்டு. ஆயினும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை.