பாகிஸ்தானில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலையடுத்து பண பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கியில் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல் ஹேக்கர்களால் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக சிலரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பெயரில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அனைத்து வங்கிகளிலிருந்தும், 8 ஆயிரம் வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சைபர் அத்துமீறலாக கருதப்படும் இந்த தகவல் திருட்டின் காரணமாக பாகிஸ்தான் வங்கிகள் சர்வதேச பணப்பரிமாற்றத்தை தடை செய்துள்ளன. மொபைல் பேங்கிங் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.