அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார்.
” குடியரசுக்கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த இயக்கம் முன் எப்போதும் இல்லாத எல்லா நேரத்திலும் யாரும் காணாத ஒரு அற்புதமான அரசியல் இயக்கம்.. தற்போது வெற்றி வாகை சூட்டியிருக்கிறது.
நமது நாட்டிற்கு இப்பொழுது பெரிய உதவி தேவைப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். அமெரிக்காவை மகத்தான நாடாக மாற்றுவேன்.
நான் ஒவ்வொரு நாளும் உங்களின் உரிமைகளுக்காக போராடுவேன்.. அமெரிக்காவின் பொற்காலத்தை உருவாக்குவேன். மக்கள் என்னை நம்பிதான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகாது. இந்த நாள் எனது வாழ்நாளில் மிக முக்கிய நாட்களில் ஒன்று.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்க்கு நன்றி..( என உணர்ச்சி பொங்க பேசினார்) . இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. இந்த தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்கர்கள் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது. உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி ” என்று தெரிவித்துள்ளார்.