”மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது” - உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி! யார் இந்த வலேரி ஜலுஷ்னி?

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை மையமாக வைத்து, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக, உக்ரைன் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வலேரி ஜலுஷ்னி
வலேரி ஜலுஷ்னிஎக்ஸ் தளம்
Published on

உக்ரைன் நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்தவர், வலேரி ஜலுஷ்னி. ரஷ்யா அந்த நாட்டு மீது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் படையெடுத்து வரும் நிலையில், தொடக்கத்தில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டன. அந்தச் சமயத்தில் ராணுவத் தளபதியாக இருந்த வலேரி, ”ட்ரோன்கள் மற்றும் உயர் ரக ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் போட்டியிட முடியும். மேலும், போரில் வீரர்கள் பற்றாகுறை ஏற்பட்ட நிலையில், வீரர்களை அணிதிரட்ட சட்டமாற்றங்கள் அவசியம்” என ஆளும் அரசுக்கு எதிராக விமர்சித்திருந்தார். இதனால் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, அவர் இங்கிலாந்துக்கான உக்ரைன் தூதராக உள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், “மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “2024இல் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று நம்பிக்கையாக கூறமுடியாது. வடகொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னால் உள்ளனர்.

உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். உக்ரைனில் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்” என்றார். வலேரி ஜலுஷ்னியின் இந்தப் பேச்சு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா|பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்..தன் வினையால் துப்பாக்கி குண்டுக்கு இரையான இந்திய மாணவர்!

வலேரி ஜலுஷ்னி
275 மில்லியன் டாலர்.. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு காட்டும் அமெரிக்கா.. என்ன காரணம் தெரியுமா?

உக்ரைன்  - ரஷ்யா போர் ஏன்? அமெரிக்காவின் பங்கீடு என்ன?

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியாவும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜெலன்ஸ்கி, ஜோ பைடன்
ஜெலன்ஸ்கி, ஜோ பைடன்எக்ஸ் தளம்

இதற்கிடையே, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது. தவிர, உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தனது ராணுவத்தையும் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்த உத்தரவிட்டது. இதற்கிடையே, உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் அணு ஆயுத ஏவுகணையை ஏவியது. ஆனால், அதை ரஷ்யா தடுத்து அழித்தது. இதையடுத்து, ரஷ்யாவும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிச் சோதித்துப் பார்த்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போர், அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அதானிக்கு மேலும் சிக்கல் | ஆஸ்திரேலியால் இனவெறி பாகுபாடு.. பழங்குடி இன மக்கள் அதிர்ச்சி புகார்!

வலேரி ஜலுஷ்னி
உலகப்போர்? | ATACMS-ஐ பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி.. ரஷ்யா எதிர்ப்பு.. இனி என்ன நடக்கும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com