"சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவத் தயார்" இந்தியா; சீனா எல்லைப் பிரச்னை குறித்து ட்ரம்ப்

"சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவத் தயார்" இந்தியா; சீனா எல்லைப் பிரச்னை குறித்து ட்ரம்ப்
"சிக்கல் அதிகரித்தால் நாங்கள் உதவத் தயார்" இந்தியா; சீனா எல்லைப் பிரச்னை குறித்து ட்ரம்ப்
Published on

இந்தியா - சீனா இடையே சிக்கல் அதிகரித்துள்ளது, வேண்டுமானால் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் நடந்த இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். மேலும், "இந்தியாவின் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை. நம் வீரர்களின் தியாகம் வீண் போகாது" எனக் கூறியிருந்தார். சீனா - இந்தியாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை தொடங்கியபோதே, அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறினார். ஆனால் இரு நாடுகளுமே அதை நாசுக்காக நிராகரித்தன.

கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியா 20 பேர் உயிரிழந்தார்கள் என்று அறிவித்தது. ஆனால் சீனா எல்லையில் உயிரிழந்தவர்கள் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் சீன ராணுவத்திலிருந்து குறைந்தபட்சம் 35 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து, அந்நாட்டுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.

இப்போது கிழக்கு லடாக்கில் பிரச்னை பூதாகரமாக வெடித்த பின்பு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனா ஒரு முரட்டு நடிகர் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் " இது மிகவும் கடினமான சூழ்நிலை. நாங்கள் இந்தியாவுடனும், சீனாவுடனும் பேசுகிறோம், அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய பிரச்னை உள்ளது. இரு நாடுகளும் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றோம். அவசியமெனில் அவர்களுக்கு உதவுவோம்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com