பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிட்டாததால், கூட்டணி ஆட்சியை அமைக்க பிரதமர் தெரசா மே முடிவெடுத்துள்ளார்.
பிரிட்டனில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களில் வென்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லேபர் கட்சிக்கு 261 தொகுதிகளில் வென்றது. ஆட்சியமைக்க குறைந்தது 326 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த டியுபி (D.U.P.) கட்சியின் ஆதவுடன் ஆட்சியமைக்க பிரதமர் தெரசா மே முடிவு செய்திருக்கிறார். டி.யு.பி. கட்சி 10 இடங்களில் வென்றிருக்கும் நிலையில், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து விடும். இதையடுத்து அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்து ஆட்சியமைக்க தெரசா மே உரிமை கோரினார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தநிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலைப் போலவே இதிலும் முடிவுகள் வேறாக இருந்தது.